பணம் ருசிக்கும், பின் மனம் கசக்கும் (பலரும் அறியா வாழ்வின் உண்மை)

இறந்தது
தன் னொரேமகனென
அறியாதவரையில்,
பிறரை ஏய்த் துண்ணும்
பணம்
ருசிக்கும்

இறந்தது
தன் மகனென
அறியும்தருணம் - இதுவரை
ருசித்துப் புசித்தது
மகனின் ரத்தமென உணர
இயங்காத இதயம்
இடித்துத் துடிக்க
மனம்
கசக்கும்


குறிப்பு:
மறுமுறை இக்கவிதையை, தலைப்பு மட்டும் மாற்றி சமர்ப்பித்ததன் காரணம்; இக்கவிதையின் பொருள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நல்எண்ணத்தால் மட்டுமே.

எழுதியவர் : A. பிரேம் குமார் (13-May-12, 8:50 am)
சேர்த்தது : A. Prem Kumar
பார்வை : 266

மேலே