தலைமுறையாய்
என் மகனிடம் கேட்டேன் .
நீ
எப்பொழுது திருமணம்
செய்து கொள்வாய் ?என்று ..
பிறகு
வயசு ஏறிக்கிட்டே போகுதே
என்றேன் ...
அதற்கு மகன் எனக்கு
இன்னும் வயசு ஆகல !
அதற்கு நான் ...
நான் சொல்றத என்னைக்குத்தான்
கேட்பாய்!
நீ மட்டும் உங்க அப்பா
சொன்னத கேட்டியா?
என்னை அதிகாரம் பண்றே !
அதற்கு நான் ..
என் காலம் வேற.
உன் காலம் வேற. என்றேன் ..
அதற்கு அவன் ..
நான் வேலைக்குப் போகணும் ..
பிறகு என்னைய ஏன்
படிக்க வைத்தாய்?
நான் அவனிடம் ..
விவசாயம் நம்மிடம் இருக்குப்பா என்றேன்
அதற்கு அவன் ..
பேசாம உன்னை மாதிரியே
மாடு மேய்க்க விட்டுருக்கலாமே!
உன்ன மாதிரியும் ..!உன்னோட
அப்பா மாதிரியும் ...!