பரிசு அலமாரிகள்,,,,,,,,,,,,,,,,
பலர் பாராட்ட
மேடையில் வழங்கப்பட்ட
பரிசுகள்,
வெற்றியின் அடையாளமாய்
உயர்வாய் பேசி கொடுக்கப்பட்ட
கோப்பைகள்,
இக்கலையில்
இக்காரனத்தால்
இவன் சான்றோன்
என கொடுத்த
சான்றிதழ்கள்,
பலத்த கைதட்டல்கள்,
பாராட்டு உரைகள்,
எதி காலத்தை
மிக வெளிச்சமாய்
சொல்லி வந்திட்ட - பரிசுகள்,
கவனிப்பின்றி
தூசு படிந்து,
அழுக்கடைந்து,
கலையிழந்து கிடக்கிறது
என் கிராமத்து வீட்டில்,
திறமைக்கு
கொடுக்கப்பட்டவை
தீண்டுவார் இல்லாமல் கிடக்கிறது,
வாங்கிய போது
வானில் பறக்க வைத்தவை
வலுவிழந்து கிடக்கிறது,
அருமை பெருமையாய்
வந்தவை - இன்று
வற்றிய குளமாய் காய்கிறது,
கழுத்துக்கு
மாலை கொடுத்தவை - இன்று
கழுத்தறுந்து கிடக்கிறது,
புகழ் மலைகள்
காய்ந்து போனது,
பொன்னாடைகள்
கரிதுணியாய் ஆனது,
புகழ் பெறுதல்
தொடராமல் போனதால்
என் பரிசு அலமாரிகள்
முக்காடு இட்டு முடிவு பெற்றது.