பாலுக்கும் மனிதனுக்கும்

பாலுக்கும் நமக்கும்
பரம்பரை பகை போலும் ,
கொடுத்தார் சிரித்ததில்லை !

அன்னை கொடுத்த பால் மறந்தோம் ,
அன்பை மறந்து அவளை அனாதையாக்கினோம்
இறுதியில் முதியோர் இல்லத்தில்
அவளை முள் மேல் படுக்கவைத்தோம் !

அன்னைக்கு அடுத்ததாய் ,
பால் கொடுத்த பசுமாடு ,
கறக்கும் வரை கறந்து விட்டு ,
இறுதியில் ,
இறைசிக்கடையில் இறையக்கிவிட்டோம் !

பக்தியுடன் பாலுற்றினோம் ,
பாசத்தோடு பார்த்து ரசித்தோம் ,
வெறி என்று வந்தபோது ,
பிடுங்கி சாய்த்து பலி வாங்கியது பாவி நாகம் !

எழுதியவர் : வினாயகமுருகன் (17-May-12, 9:23 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 259

மேலே