தயங்காதே !

உன் செவ்வாயால் என் காதைக் கடி !
உன் மூச்சுக் காற்றால் என் தேகத்தை சூடேற்று!

பக்கம் வந்தென் பெண்மையைப் பரிசோதி
உன் இழுவைக்காக நித்தமும் நழுவுகிறது
என் சேலை!

உன் முத்ததிற்காக ஏங்குகிறது என் கன்னம்!

இன்னும் பல உயிர் ஜனிக்கும் உன் பல் பதித்த பள்ளத்தில்!

பனிமலைத் தீர்த்தமாய் இனித்தது
நீ முத்தமிட்ட எச்சில்!

பல யுகங்களாய் சிப்பிக்குள் முத்து தூங்கினாலும்
கடலடியில் சங்கு தூங்கினாலும்
விழித்திருக்கும் என் கண்கள்
இரவெல்லாம் உனக்காக!

காத்திருக்கிறேன் நான் உன் அழகிய
அவஸ்தைக்காக!

தயங்காதே!

தாய் சொல்லைக் கேள்
நான் பத்து மாதம்
பெற்றெடுத்த என் செல்வமே !

எழுதியவர் : கார்த்திகா கிருஷ்ணன் (18-May-12, 10:03 am)
பார்வை : 249

மேலே