மௌனங்கள் ராகங்கள் பாடிட வேண்டும்

விரல் தொட்டு மீட்டிட
காத்திருக்கிறது
வீணை ராகங்கள் பாடிட வேண்டும்

கரம் பற்றி காதலன் வர
காத்திருக்கிறாள்
பெண் வாழ்வின் கீதம் இசைத்திட வேண்டும்

கை கூப்பி நாம் வணங்கிட
இறைவன் காத்திருக்கிறான்
ஆலயத்தில்
ஆன்மாவின் மௌன ராகங்கள்
பாடிடவேண்டும்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-May-12, 9:53 am)
பார்வை : 184

மேலே