பிரபஞ்சத்தின் உயிர்!!
அன்பு
ஆம்!
ஆத்மாவில் ஜொலிக்கும்
பாவ விமோசனத்தின் விடிவெள்ளி !
இது
பண்பாட்டின் திருவிளக்கு,
ஞானத்தின் மூலாதாரம் ,
ஏழையின் சிமாசனம் ,
கருணையின் கருவறை ,
கண்ணீரின் பிறப்பிடம் ,
மௌனத்தின் சங்கமம்
இன்னிசைநாதத்தின் குரல்வளை ,
பொறுமையின் ஏகாந்தம் ,
பகுத்தறிவின் பாசறை
நட்பின் ஏகாந்ததென்றல் ,
பிறப்பின் சாகசம் ,
திக்கற்றவர்களின் ஏக்கம் ,
பணக்காரனின் பாவபொருள்
பண்பட்டவனின் அமுதசுரபி
பகைவனை நண்பனாக்கும் பேராயுதம் ,
காதலின் புனிதத்தலம்,
தீயகுணங்களை பொசுக்கும் அக்கினி,
நற்குணங்களின் நாற்றங்கால்,
நன்றியுள்ளவர்களின் நந்தவனம் ,
முக்காலத்திற்கும் பேரொளியை
அள்ளி தரும் தீபவிளக்கு!
அன்பு இல்லா உயிர்
அரக்கன் உயிர்வாழும் ஜடம் !!!!
அன்புள்ளவன் தெய்வத்தின் மறுவுருவம் ,
அன்பொன்றே மகிழ்ச்சியின் இதயம்,
அன்பில்லா ஆத்மா
மழை இல்லா பாலைவனம்.
இதையத்தில் அன்பு
ரோஜாவின் தேன்!!!!!!
ஆம்! அப்படிப்பட்ட அன்பே
நம் மூச்சி , நம் வாழ்கையெனும்
சக்கரத்தின் அச்சாணி,
அன்பே பிரபஞ்சத்தின் உயிர்
அன்புள்ளவரை இப்பேரண்டம் வாழும்!
அன்பு அழிந்தால்
இப்பேரண்டம் அழியும்!