என்னவளுக்கு ???
![](https://eluthu.com/images/loading.gif)
என் முதல் நாள் சம்பளம்
என்ன வாங்கிச் செல்ல அவளுக்கு ?
அதிக விலை வண்ண புடவை ?
ஆனால் அவளுக்கு வெள்ளை மட்டுமே பிடிக்கும்.
விலையுர்ந்த குங்குமச்சிமிழ் ?
ஆனால் அவளுக்கு திருநீறு மட்டுமே பிடிக்கும்.
கை வளையும் கால் கொலுசும் ..
அவளுக்கு நிசப்தம் மட்டுமே பிடிக்கும்.
அதிக விலை தங்க ஆபரணம்
அவளுக்கு வெறுமை மட்டுமே பிடிக்கும்.
ம்ம்.. ம்ம்.. ம்ம்..
என்னதான் வாங்கிச் செல்ல ?
என்னை வளர்த்து ஆளாக்கிய என்
விதவைத் தாய்க்கு?