நடைபிணமாய் !

உன் உறவில்,பிரிவில் ,
அன்பில், துயரில், உன் காதலில் ,
வாழ்ந்த நான் உயிர் பிரிந்த பின்பும்
உனக்குள்ளே வாழ்வேன்
உருவம் இல்லா பொருளாக !

உன்னால்தான் காதல் வந்தது
கவிதையும் வந்தது - என் இதயமும்
தொலைந்தது !

உன்னை பிரிந்து பல நாட்கள்
ஆகியிருக்கலாம் ,
உன்னை மறந்து ஒரு நிமிடமேனும்
நகரவில்லை !

இன்றுவரை உன்னை பிரிந்து
எத்தனையோ !
நாட்கள் கடந்துவிட்டேன் ! - உன்
நினைவுகளின் துணையோடு !


உடலைவிட்டு உயிர் பிரிந்தால்
எரிப்பது வழக்கம் ! - நீ
என்னை பிரிந்த பின்னும்
நான் இன்னும் நடைபிணமாய் !

எழுதியவர் : (21-May-12, 6:06 pm)
சேர்த்தது : வளர்மதிராஜ்
பார்வை : 229

மேலே