சோதனையே சாதனை (அனுபவ பாடம் )

நான் கேட்காத வரம் மனிதனாய் பிறந்தது ,
வயதுக்கேற்றாற்போல் வளர்ந்தேன் ,
வசதிகளில் ஒன்றும் ஏற்றம் இல்லை ,
வறுமையின் கொடுமை ஏற்றம் தவிர !

நான் வாழவேண்டும் என
நினைத்தவர்களை காட்டிலும்
என் வீழ்ச்சியை எதிர்பார்தவர்களே அதிகம் ,
கருணை பார்வைகளின் கண்கள் காணமல் போய்
கொடுமையனவர்களின் கண்களில் சிக்கி தவித்தேன் !

தோல் கொடுக்க ஆள் இல்லை ,
தோல்வியை கொடுத்தவர்கள் தவிர ,
மனம் தளராமல் போராடினேன் ,
இரடி விழுந்தபோது எல்லாம் இலக்கார சிரிப்பு !

"எல்லாம் நல்லதே நடக்கும் "
நம்பிக்கை வரிகள் நெஞ்சில் நாளுக்கு நாள் ஊன்ற
அவநம்பிக்கைகள் எண்ணங்கள் மெல்ல அழிய
நபிக்கை துளிர்கள் துளிர்க்க தொடங்கின !

கிடைத்த வாய்ப்புகளை கெட்டியாய் பிடித்தது
வளர்ச்சிப்படிகளை
ஒவ்வொன்றாய் தாண்டும் போது
இறைவனின் பரிட்சைகள் என்னை எடைபோட ,
சோதனைகளின் சூழ்சிகள்ஆரவாரம் போடா மனிதன் நான் ஆண்டவன் அவனிடம் மண்டியிட்டதை தவிர ஒன்றும் இல்லை !

தனிமையில் அழுதேன் ,
வாழக்கையை வெறுத்தேன் ,
வாழ முயற்சித்து வீழ்ந்தாரை உலகத்தின்
கேலி பார்வையில் எத்தனை கொடுமை செய்யும் ,
நினைக்கையில் மனம் புண்ணாக ,
உள்மனதில் மட்டும் ஒரே தாரக மந்திரம்
"எல்லாம் நல்லதற்கே "!

சிலசமயத்தில் சோதனைகளில்
இறைவன் என்னை பட்டை தீட்டி
மின்னும் வைரமாக ஆக்கி இருக்கிறான் ,
என்னை மெல்ல காய்ச்சி
வலுவான போர்வாளாக படைத்திருக்கிறான் ,
சோதனைகள் எல்லாம் என்னில்
அனுபவ பாடத்தை புகட்ட
சாதனை பயணத்தில் சிறு சிறு தடங்கல்கள் !

ஆயினும் ஆண்டவன்
சோதனைகளின் முடிவுகளில்
மனிதர்களின் மறு முகத்தை காட்டினான் ,
இதுவரை ஏமார்ந்த நான்
இதுமுதல் விழிக்க தொடங்கினேன் !

வெற்றி தோல்வி ,
துக்கம் சந்தோசம் ,
நண்பன் துரோகி ,
நன்மை தீமை ,
எல்லாம் பாடங்களால் பக்குவப்பட்டது ,

பரந்த உலகில் எனக்கென்ற வாய்ப்பை தேடினேன் ,
உண்மையோடு உழைப்போடு போராடினேன் ,
வந்த சிறு தடைகளையும்
படிகற்களாக மாற்றி
சாதனை பயணம் தொடங்கி
சாதித்துக் காட்டிக்கொண்டிருக்கிறேன் ,
நடந்தெதெல்லாம் நன்மையே ,
வென்று காட்டியது உண்மை ,உழைப்பு ,
தொற்றுப்போந்தோ பொய்யும் புரட்டும் ,
நடந்ததும் நன்மைக்கே ,
நடப்பதும் நன்மைக்கே ,
நடக்கவிருப்பதும் நன்மைக்கே ,
"எல்லாம் நல்லதே நடக்கும் "!

எழுதியவர் : வினாயகமுருகன் (23-May-12, 12:31 am)
பார்வை : 518

மேலே