அன்பின் இலக்கணம்
தன்னை சுட்டெரிக்க வரும் சூரிய
கதிர்களையும் உள்வாங்கிக்
கொண்டு புன்னகையுடன்
இதழ் விரிக்கிறது தாமரை!!
ஆசை ஆசையாய் தான் எழுப்பிய
மணல் கோட்டையை அலை வந்து
தகர்த்த பின் கூட அதன் மேல்
போர் தொடுக்க விரும்பவில்லை
மழலைகள்!!
தங்களை சிறை பிடித்து கூண்டுக்குள்
அடைத்த மாதர்களுடன் கூட
சிரித்து விளையாடுகின்றன
கிளிபிள்ளைகள்!!
சில நிமிடங்களே ஆயுள்..
என்றபோதும் கூட பார்பவர்கள்
கண்களுக்கு விருந்தூட்டி மறைகின்றது வானவில்!!
தன்னை வெட்டி சாய்த்து கொண்டிருக்கும்போது கூட
அவர்களுக்கு நிழல் கொடுக்க சிறிதும் தயங்கவில்லை மரங்கள்!!!
தன்னை தோண்டி கொண்டிருப்பவனையும் விழாமல் தாங்கிகொண்டுதான்
இருகின்றது பூமி!!
இப்படி நம்மை சுற்றி ஒரு அன்பு இலக்கணமே இயங்கி கொண்டிருக்க..... இன்னும் எங்கே தேடி கொண்டிருக்கிறோம் அன்பின் மகத்துவத்தை?????