அன்னைக்கு அஞ்சலி
அம்மா உனக்கு கண்ணீர் அஞ்சலி
பாலூட்டி வளத்த உனக்கு
பால் ஊற்ற நேர்ந்தது ,
காக்கையை காட்டி சோர் ஊட்டிய நீ
காக்கையை வந்து சாப்பிட நேர்ந்தது ,
பௌர்ணமியான உனக்கு
அம்மாவசை திதி நியாபக தேதியானது ,
கருவறையில் காத்த உன்னை ,
கல்லறையில் சேர்க்க நேர்ந்தது ,
பத்துமாதங்கள் பார்த்து பிறந்த நான் ,
16 - ம் நாள் படைக்க நேர்ந்தது ,
நீ எனக்காக சிந்திய வேர்வையை மிஞ்ச
கண்ணீர் தோற்றது ,
தாயே நீ மறைந்து தெய்வமானாய் ,
உன்னை மறந்தால் நானும் மிருகமாவேன் !