என்றும் உன்னுடன்
சிறு வயதில் உன்னுடன் நான்
நீ வளர வளர உன்னுடன் நான்
நீ பெற்ற வெற்றிகளில் நான்
நீ அடைந்த கர்வத்தில் நான்
உனது சந்தோஷத்தில் நான்
உனது அழுகையில் நான்
உனது தனிமையில் நான்
உன்னை தனித்து காட்டியது நான்
உனது பாராட்டுகளின் காரணமும் நான்
இறுதி வரை உன்னுடன் நான்
இப்படிக்கு
கல்வி ?