இவர்கள் ....

இவர்கள் ....
உயர் திணையில் பிறந்த அக்க்றினைகள்..
ஆண்...பெண்.. பாலில்
திரிந்த பால்!
இயற்கையின்
சிருஷ்டி மனிதர்கள்!
திருஷ்டி இவர்கள்..?
அதுவும் இதுவும் இல்லா
இடைவெளி சூன்யங்கள் ......
ரோஜா செடியில் பூத்த
காகித பூக்கள்!
வம்சாவழியின் முற்று புள்ளிகள்...
தறிகள் மறுத்த தனி நூல்கள்..!
அன்பை தொலைத்த அகதிகளின் கொத்து
அழுகையும் அவலமும்
இவர்களின் சொத்து...
இனவரைவியல் சொல்லும்
மூன்றாம் வரைவியல்..
நடமாடும் கல்லறைகள்!
உறவால் ஒதுக்கப்பட்ட திருநங்கைகள்!
ஆடற்கலையின் அற்புதம் பதினொன்று!
அதில்,
"பேடி" என்பது
பிதாமகனாகும்!

கறவை இனத்தில்,
'பத்தின மாடென்றால்
அன்பாய் ஏற்பார்!
இறையும்
கறவையும்
இனம் மாறினால்
ஏற்கும் உலகம்..
இவர்களை மட்டும் ஒதுக்குவது நியாமாகுமோ?
அரவாணி என்று அடித்துக் கொண்டு,
திருநங்கை என்று சிரிக்கும் மனிதா..
இவர்களும்
ஓர் உயரினம் என்று உணர்ந்தால் போதும்..
ஆண்...பெண்..
உரிமை வேண்டாம்..
மண்ணின் உரிமை
மனதாலும் வேண்டாம்...
மனித உரிமை மட்டும் மறுக்காமல் வேண்டும்..!...?

எழுதியவர் : ந. ஜெயபாலன், திருநெல்வேலி (23-May-12, 5:50 pm)
பார்வை : 228

மேலே