வழக்கு என்:18/9-என் பார்வையில்

அரசு மருத்துவமனையில்
ஒரு தாயின் அழுகுரலோடு
ஆரம்பிக்கின்றது வழக்கு என்:18/9
பெண் பாலின வன்கொடுமை
ஏழ்மையின் வாழ்வு போராட்டம்
என்று சொல்லாமல் செல்கிறது
கந்துவட்டியின் கயமையில்
பெற்றோரையும் படிப்பையும்
தொலைத்த சிறுவனின்
கொத்தடிமை கொடூரங்கள் .
நடைபாதையில் வாழ்வைத்தேடும்
வாலிபத்தை வாசிக்கிறது
பணத்தின் பவுசு மவுசு
கைபேசியின் கருப்பு பக்கம்
அரசியல்வாதியின் அயோக்கியத்தனம்
‘உங்கள் நண்பன்’ காவல்துறையில்
கயமை அதிகாரியின் பச்சோந்தித்தனம்
அவமானத்தின் ஆக்ரோசம்
நியாயத்தின் தடுமாற்றம்
இன்னும் நிறைய....
தமிழ் திரையில்
இப்படியொரு படமா?
இருக்கலாமா பார்க்காமல்?