வாழ்க்கை!

வாடிப்போவதற்க்கா
வாழ்க்கை?
வாழ்ந்து பார்ப்பதே
வாழ்க்கை!
பிறந்ததால் வாழ்கிறோம்
என்பதல்ல வாழ்க்கை!
வாழ்வதற்கே பிறந்தோம்
என்பதே வாழ்க்கை!
ஏன் பிறந்தோம்?
என்பதல்ல வாழ்க்கை!
எப்படி வாழ்கிறோம்
என்பதே வாழ்க்கை!
பத்தோடு பதினொன்று
என்பதல்ல வாழ்க்கை!
அந்த-
பத்தையும் பயன்படுத்தி
பங்குடன் வாழ்வதே வாழ்க்கை!
மரம் - செடி
மற்றவர்களுக்கு பயன்படுகிறது,,,
மனிதனே நீ?
நாமும் வாழ்வோம்..!
நம்மை சர்ந்தோர்களையும் வாழவைப்போம்!
நாம்,
வாழ்ந்த செய்தியை
வரலாற்றில் பதிய வைப்போம்!

எழுதியவர் : ந.ஜெயபாலன்,திருநெல்வேலி 6 (24-May-12, 5:08 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 180

மேலே