வெக்கமா இருக்கு

கிரிக்கெட் எனக்கு
ரொம்ப பிடிக்கும்
என்று சொல்லவே
வெக்கமா இருக்கு

மகாபாரதத்தில் நடந்த
மாய ஆட்டமெல்லாம்
இதிலேதான் நடக்கு?

அதிலும் ஐபில்(IPL)
விளயாட்டைவிட
நடிப்புத்தான்
நிறைய இருக்கு
நடிகர்கள் கையில்
போனதாலோ?

மைதானத்தில்தான்
ஆட்டம் என்றால்
அசிங்கம் நீளுது
நட்சத்திர ஓட்டல்வரை

கிரிக்கெட் எனக்கு
ரொம்ப பிடிக்கும்
என்று சொல்லவே
வெக்கமா இருக்கு

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (24-May-12, 5:10 pm)
பார்வை : 212

மேலே