24.5.12-போகிற போக்கில்...! பொள்ளாச்சி அபி

பரந்த சமுதாயவான்வெளியில்
வயதுவந்த நிலவுகள் ஒளிதரக் காத்திருக்கின்;றன.
ஆனால்
வரதட்சணை மேகங்கள்தான்
வழிவிடுவதில்லை..!

இனிமை மாறாக் கானக்குயில்கள்
கூவித் திரியத்தான் காத்திருக்கின்றன.
ஆனால்..
பசுஞ்சோலைகள்தான் அனுமதிப்பதில்லை.

இன்பப் பூக்களுக்குத் தாலாட்டுப் பாட
தென்றலும் வீசத்தான் செய்கிறது.
ஆனால்..
சமூகவேலி முட்கள்தான் அதை
சம்காரம் செய்து சந்தோஷிக்கின்றன.

பருவப்பூங்கொடிகள் படர்ந்து
பரவத்தான் காத்திருக்கின்றன.
ஆனால்
கொழு கொம்புகள்தான்
தள்ளியே நிற்கின்றன

அழகுகள் காதலிக்கப்படுவதற்குத்தான்
காலம்தோறும் காத்திருக்கின்றன.
ஆனால்
அந்தஸ்துகள்தான் அதனை
அனுமதிப்பதில்லை.

மனங்கள் இனிமையான
உறவுகளைத்தான் விரும்புகிறது
ஆனால்
பணம்தான் உறவுகளுக்கு
விலைதேடி கசப்படையச் செய்கிறது.

அர்ச்சிக்கப்படுவதற்கு அழகான
மலர்கள் காத்திருக்கின்றன
ஆனால்
அவதார புருஷர்கள்தான்
அதனை அனுமதிப்பதில்லை..

இருமணம் கலக்கும் திருமண வாழ்வு
தன்போக்கிலிருக்க இயற்கை அனுமதிக்கிறது.
ஆனால்
லாபம்தேடும் செயற்கை மனிதர்களால்தான்
பெண்கள் வாழ்வு சீரழிகிறது.!

விடியல் தேடும் மனங்கள்
என்றும் வெளிச்சத்திற்காக காத்திருக்கிறது.
ஆனால்
இந்தஇரவுகள் என்றும் விடியாதென்று
இன்னமும் உலகம் அறிவிக்கிறது.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (24-May-12, 6:50 pm)
பார்வை : 212

மேலே