ஒரு மரத்தின் கண்ணீர்
மரங்களே ! உயிர் காக்கும் வரங்களே !
ஏதற்கு இந்த இரு கை விரித்து
ஒற்றை கால் தவம் ?
யாரை எதிர்நோக்கி உங்கள் தலை வானம் பார்த்து காத்திருக்கிறது ?
மனிதர்கள் பொறாமைகாரர்கள் !
தம்மை விட உயரமாய் யாரையும் வளர விடுவதில்லை !
அதனால்தான் உன் காற்றை வாங்கி
சுவாசம் நிரப்பியும் கோடரி முத்தம் கொடுக்கிறார்கள் ! அதெப்படி மரமே ?
எங்கள் தீய காற்றை தின்றும் நீ சுவாசம் தருகிறாய் ?
நாங்கள் நிராகரித்தாலும் நீ நிழல் தருகிறாய் ?
கல்லெறிந்து கேட்டாலும் நீ கனி தருகிறாய் !
வெட்டி எறிந்தாலும் விறகு தருகிறாய் ! சிலிர்கிறது !.
மன்னித்து விடு மரமே !
உன்னிலும் சிறிய இச் சிறுவர் பிழை பொறு !
ஒரே ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய் !
உன் அருமை புரியும் இவருக்கு !
அது வரை இவர்கள் உன் கரங்களை வெட்டி கயிறு கூட செய்வார்கள் !
கொதித்திடு மரமே !
உன் லட்சம் இலை விழிகள் வழியே அக்கினி அனுப்பு ! அகிலம் உணரட்டும் !
!