ஒரு மரத்தின் கண்ணீர் 2
அகிம்சை வேண்டாம் மரமே !
இவர்கள் இயேசு நாதர் கரங்களிலும் ஆணி அடிப்பவர்கள் !
காந்தியடிகள் மார்பிலும் தோட்டா முத்தம் கொடுப்பவர்கள் !
காலத்தின் பிழை மரமே ! இங்கே
வாழும் போது யாருக்கும் அருமை தெரிவதில்லை !
மரித்த பின்புதான் மனிதர்களையும் தலைவர் என்கிறார்கள் !
உன் விறகிற்கும் விளக்குமாருக்கும் ஆசை படுகிறார்கள் !
உன்னை புதைத்த பிணம் தோண்டி நிலக்கரி என்கிறார்கள் ! தவறுதான் !
தண்ணீர் தரவும் மனமிலாது வீட்டு வெளியே நிறுத்தி வைத்திருந்தாலும் பொறுமையோடு நின்று பூ பொழிகிறாய் மரமே !
உன் முன் புத்தனும் ஓராண்டு அமர்ந்து அன்பு கற்று கொள்வான் !
ஒவ்வொரு முறையும் நீ எமக்கு பூக்களை பரிசாக தருகிறாய் ஆனால் அதை உன் மரணத்திற்கு மலர் வளையமாய் செய்து விடுகிறோம் !
என்னவோ தெரியவில்லை மரமே !
ஏன் விழி இரண்டை நனைத்து விட்டாய் !
ஒரு வேளை கடவுள் உன் வடிவில் கண் உறங்குகிறான் போலும்