மனமே சஞ்சலப்படதே ..!

மனமே சஞ்சலப்படதே ..!
சாக்கடை உலகிற்கு ...சங்கீதம் வராது ...
சந்தேகம்தான் வரும்...!?
சகோதரத்துவம் சந்தடியேயில்லாமல்
சமாதியாக்கப்படுகிறது ...!!!
மனிதாபிமானம் மண்ணோடுமண்ணாக
மரணித்துகொண்டு இருக்கிறது ...!!!
நேசங்களும் ...பாசங்களும் ...
சலனங்களே இல்லாமல் உயிரற்று கிடக்கிறது ...!!!
பரவாயில்லை .....
மயானத்தில்தான் மன நிம்மதி ...
கிடைக்கும் என்றால் ....
மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்...?!
அதற்காக ....மனிதர்களே இல்லையென்று
நான் மரண வாக்குமூலம்
கொடுக்க விரும்பவில்லை ....!!?
மனிதர்களும் வாழ்கிறார்கள் ....
மயான உலகில் மௌனமாய் ....!!!
தாயுடன் தனையன்...துணையாய் வந்தாலும்
தரித்திர உலகம்
தப்பாய் அல்லவா பார்க்கிறது ....?
எக்குதப்பாய் அல்லவா பேசுகிறது ...?
ஏன் இந்த முரண்பாடு என்று ...இந்த
முரட்டு மூடர்களை பார்த்து
நான் கேள்வி கேட்க விரும்பவில்லை ...!!?
முரட்டு மூடர்களிடம் மோதுவதை காட்டிலும் ...
மயானத்தில் இருட்டு அறையில்
நிம்மதியாய் வாழலாம்...?!
பணத்தை பார்த்து ...பகட்டாய் பேசும்
இந்த பைத்தியக்கார உலகத்திடம்....
நான் எப்படி குணத்தை பற்றி பேசுவது ..?
குணத்தை இழந்த குருடர்களிடம் .....
கும்பிடு போடுவதைக்காட்டிலும்...
பணத்தை பார்த்து ..பிணத்தை தூக்கும்
பிசாசுகளிடம் பிச்சை கேட்பதைக்காட்டிலும்...
நான் ..
இந்த மயான உலகில் .....
மௌனமாய் சாகவே ...ஆசைப்படுகிறேன் ..?!!!

எழுதியவர் : இரா.அருண்குமார் (27-May-12, 12:05 am)
பார்வை : 245

மேலே