சொந்த ஊரெனும் சொர்க்கம்விட்டு!

வந்துவிட்டோம்
நகரமெனும் நரகத்திற்கு....
வாழ வழி இல்லையென்று!
...
பக்கத்துக்கு வீடு மாமன், அத்தையையும்
எதுத்த வீட்டு அக்கா, மாமாவையும்
லட்சுமியையும்(மாடு), கருப்பனையும்(ஆடு)
விட்டு அந்நியப்பட்ட
கூட்டு வீடுகளுக்குள்
குப்பையில் நெளியும் புழுவாய்
வாழப்பழகிவிட்டோம்...

கொல்லையில் சேவல் கூவ
வண்டிச்சத்தமும், கோவில் மணியும்
கேட்டு விடிந்த காலைப்பொழுது...
இன்று
பஸ் ஹாரன்களோடு பரபரப்பாய்!

நினைத்தால் கிளம்பிவிடுவோம்
வாய்க்காலுக்கு
குளிக்கவும்,கொட்டமடிக்கவும்,
குருவியும், மீனும்
பிடிக்கவும்
இங்கு சவரில் கூட
சுடுநீரே வருகிறது...

தென்னந்தோப்பில் தூளி கட்டி
ஆடியபோது இருந்த குளுமை
எந்த எசியில் கிடைக்குமோ?

அடிப்பெருக்கு நாட்களில்
ஆற்றங்கரை மணல்வெளியில்,
புரட்டாசியில் பெருமாள் மலையில்,
கார்த்திகையில் கிரிவலம்,

என்று
எல்லா மாதமும் எங்களுக்கு
திருவிழா தான்...

இங்கு
நாள்காட்டி
கிழிக்கக்கூட
நேரமில்லையே எங்களுக்கு!

பந்தலில் கிடந்த பாகர்க்காயும்
தோட்டத்து வேலியில் முளைத்த
சுரைக்காயும், கோவைக்கையும்
இங்கு
குளிர் சாதனப்பெட்டியில்
உயரற்ற பிணமாய்!

வேண்டாம்
இந்த கேடுகெட்ட
பிழைப்பென்று மனம் நொந்தாலும்
அப்பனுக்கும், ஆத்தாளுக்கும்
மகன் பட்டணத்தில்
வேலை செய்வதில் சந்தோசமே...

என்ன செய்வது.....
சொர்கத்துக்குக் கூட
விடுமுறையில் தான்
போகவேண்டும்....

எழுதியவர் : சரவணா (27-May-12, 1:19 am)
பார்வை : 688

மேலே