ஆறடி குழி...
நரிக் கூட்டம் திரியும் காடிது,
நலிந்தவர் நாட்டம் அறியா நாடிது....
உலகம் ஒன்று தான்,
உயிருள்ள யாவருக்கும்..
உதிரம் சிவப்பு தான்,
அதில் உள்ள அனைவருக்கும்..
உதயன் வேறில்லை,
உணர்வுள்ள ஜீவன்களுக்கும்..
வேட்டை கொண்டு,
உணவைக் கொன்ற போதிலும்..
போட்டி வென்று,
அடித்துப் பிரித்த போதிலும்..
பிற நாட்டை வென்று,
அரசாண்ட போதிலும்..
ஆறடி குழி தான்,
உயிர் போன பின் உறைவிடம்...!!!