கயிற்றில் அமரும் மனசு.

ஊசலாடும் கயிற்றில்...
அடிபிறழாது நடக்கிறான் அவன்.
தரையில் விழுந்து..
கயிற்றில் அமர்கிறது
என் மனசு.
*****************************************************
வெற்று வார்த்தைகள்...
கோபுரங்களாகி விடுகிறது...
அரசியலில்.
வௌவாலாய் அலைந்து திரிகிறது
எனது வாழ்க்கை....
வார்த்தைகளினூடே.
*********************************************************
"ம்ம்மாஆ .........."
"த்த்த்தாஆஆ....."
"ப்ப்ப்பாஆஆ ......"

குழந்தை...
கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.....
அம்மாவுக்கு.
************************************************************
உதிரும் சருகின் ஓசைக்குப் பின்
நீடிக்கிறது மௌனம்.
காற்றில் அசையும் மரம்...
வாழ்க்கையைச் சொல்லத் துவங்கும்...
வந்தமரும் குருவிக்கு.
******************************************************************
எப்படிச் சொல்லித் தருவேன்....
வந்தமரும் காக்கைக்கு...
துணி உலர்த்தும் கம்பிக்கும்...
மின்சாரக் கம்பிக்குமான....
வித்தியாசத்தை.
*********************************************************************
நிலா தினமும் வருகிறது...
சில குழந்தைகள்....
சாப்பிடுவதற்காக மட்டும்.
**********************************************************************

எழுதியவர் : rameshalam (28-May-12, 9:07 pm)
சேர்த்தது : rameshalam
பார்வை : 212

மேலே