இடை தேர்தல்...
குளம் நிரம்ப போவதில்லை...
ஆனாலும்,
கொக்குகள் வேட்டைக்கு வந்துவிடுகிறது...
ஆட்டுக்கறி விருந்தும்.
டாஸ்மாக் ஒயினும்
உனக்கு உண்டு..
போதை தெளிவதற்குள்
போட்டு விடு ஓட்டை..
இல்லைஎன்றால்..
துட்டு தந்தவன் தொலைத்துவிடுவான் உன்னை..
நண்பனே..
மறந்தும் உன் கோவணத்தை
கொடியில் காயப் போட்டு விடாதே..
கட்சி கொடியாய் காற்றில் பறக்க விட்டுவிடுவார்கள்!
களவானி பயல்கள்...