[242 ] சத்துணவாய் நாடிருக்கு சேர்ந்து சாப்பிடு ! !

மண்ணைவிட விண்ணைவிட மதிப்பு வாய்ந்தது!
உன்னைவிட என்னைவிட உயர்வும் வாய்ந்தது!
பெண்ணைவிடத் தாய்நடு பெருமை வாய்ந்தது!
பேச்சினிலே மட்டுமிது தமிழைப் போன்றது!

முந்தியிந்தப் பாரதமென் தந்தை சார்ந்தது!
மூழ்கிவரும் இது,அவரின் சிந்தை சார்ந்தது!
வந்துவிடும் நாட்கள்,என் தோள்கள் சார்ந்தது!
வாய்த்ததோள்கள் வெட்டிய,என் கைகள் மேலது!

உயிர்களுக்குக் கூடாரம் உனது நாடிது!
உறங்கு!உறங்கு! கூட்டுப்புழு! உனதுநாளிது!
பயிருனக்கு இலவசநீர் பாயும் நாளிது!
பயமெதற்கு மண்ணினுரம் தேயும் நாளிது!

உண்மை இங்கு ‘டாஸ்மாக்’கை உடைத்துப் பாயுது!
உழைப்பெதற்கு? ‘ரேஷனிலே’ உணவும் கிடைக்குது!
எத்துணைதான் பிரிவெனினும் எதற்குப் பிளவுமே?
சத்துணவாய் நாடிருக்கு சேர்ந்து சாப்பிடு!

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (30-May-12, 1:42 pm)
பார்வை : 199

மேலே