உங்களுக்காவது புரியுதா???...

பார்த்தேன்,நன்றாக பார்த்தேன்,உற்றும் பார்த்தேன் ஒன்றும் தெரியவில்லை
ஒருவேளை,பார்த்ததோ இருட்டிலோ....

கேட்டேன்,இசையைக் கேட்டேன்,கூர்ந்துக் கேட்டேன் ஒன்றும் கேட்கவில்லை
கேட்டது செவி இல்லாதவனின் இசையோ...

உண்டேன்,உணவுண்டேன்,அனைத்தும் உண்டேன் ஒன்றும் நிரம்பவில்லையே
உண்டது வெறும் இலையிலோ...

எழுதினேன்,கதை எழுதினேன்,அருமையாக எழுதினேன் ஒன்றும் காணவில்லையே
எழுதியது காற்றிலோ....

ஆடினேன் பறந்து பறந்து ஆடினேன்,குதித்து குதித்து ஆடினேன் ஒன்றும் சரியாக இல்லையே
ஆடியது தூக்கத்திலோ...

உறங்கினேன்,அமைதியை உறங்கினேன்,ஆனந்தமாய் உறங்கினேன் ஒன்றும் விளங்கவில்லையே
உறங்கியது கருவறையோ.......

சொன்னேன்,கவிதை சொன்னேன்,தெளிவாக சொன்னேன்,அடித்தும் சொன்னேன் ஒருவருக்கும் புரியவில்லையே
சொன்னது கவிஞனிடமோ ...



-( தானு)

எழுதியவர் : Dhanu (30-May-12, 3:10 pm)
பார்வை : 244

மேலே