அவன் நினைவுகளுடன் மட்டுமே...

செய்து முடித்த எதையும் யோசிக்கவில்லை,
யோசித்த எதையும் செய்யவில்லை...

கேட்ட வார்த்தைகளை மறக்கவில்லை
மறக்கும் அளவிற்கு கேட்கவில்லை...

அவன்,தந்த எதையும் திருப்பிக் கொடுக்க வில்லை,
கொடுக்கும் அளவிற்கு தரவில்லை...

முடிந்ததைப் பற்றி நினைக்கவில்லை,
நினைக்கமலிருக்க இன்னும் முடியவில்லை...

உயிருடன் வாழ்கிறேன்,உன் நினைவுகளுடன் மட்டும் அல்ல..
உன் உயிருடனும் ...



-(தானு)

எழுதியவர் : Dhanu (31-May-12, 12:24 am)
சேர்த்தது : dhanubp
பார்வை : 441

மேலே