[246] தாய் அடித்தாலும்...(குறுந்தொகைப் பாடல் இல்லை !)
தாய் அடித்தாலும் வாய்விட்டு அழுவோம்
அம்மா! என்றே! அறிகுதி தானே!
மின்,இலை எனினும் மின்வெட் டிருப்பினும்
உன்னை யன்றி ஓரொளி
இந்நிலத் துள்ளே எவரும் இலையே!
-௦-
(அம்மூவனார் எழுதிய குறுந்தொகைப்பாடல் 397 -ஐ யாரும் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல )