"காதல்" என்னும் அழகான பொய்.
சில விஷயங்களை
என்னால்..
விட்டுத் தொலைக்கவே ...
முடியவே இல்லை.
உதாரணமாய்....
உன்னை விடாமல்...
காதலித்துக் கொண்டிருப்பதை.
பள்ளியில்....
பாதி டிராயரோடு திரிந்த காலத்தில்....
நமக்குள் உண்டான அறிமுகம்...
எப்போது எனக்குள் மட்டும்...
காதலாயிற்று....
எனத் தெரியவே இல்லை.
உன்னிடம் அதைத் தெரிவிக்கலாம் ...
என வந்தபோது....
"காதல்" எந்த மொழி வார்த்தை...
என நீ கேட்டதில்...
நான் இன்னமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன் எனது காதலை.
நான் உனது...
கால் தடங்கள்..
உதிர்ந்த பூக்கள்...
எல்லாவற்றையும் கவிதையில் எழுதி வைக்க...
நீயோ...
ஒரு பூவிலிருந்து...
இன்னொரு பூவிற்கு பறந்து செல்லும்..
வண்ணத்துப் பூச்சியின் பார்வையை
வீசிச் செல்கிறாய் என் மேல்.
என்னை நீ இரசிக்கிறாயா?...
எனத் தெரியாமல்...
உன் பின்னால் சுற்றுகிறேன் நட்புடன்...
எனது காதல் தொலைந்து விடாமல்.
உனக்குக் கவிதை தெரியாது...
இசை பிடிக்காது...
கம்யூனிசம் தெரியாது...
என..
உன்னை வெறுக்க...
ஏராளமான காரணங்கள் இருந்தும்..
என்னால்...
விட்டுத் தொலைக்கவே முடியவில்லை...
உன் மேல் இருக்கும்....
"காதல்" என்னும் அழகான பொய்யை.