என் பாட்டனின் கதை இது....

என் பாட்டன்
என்றதும் என் நினைவில் வரும் .....
அந்த வெள்ளை சட்டையும் சிரிப்புகளும்....

அவர் கதை சொல்ல....
என் பக்கத்து படுக்கையில்....
நிலவுகள் கண்டிருக்கிறேன் ....
நிச்சயமாய்....

அவர் பேச்செல்லாம்....
பாரதியின் பக்கங்களை
சார்ந்தே இருந்திருக்கின்றன.....

விழுந்த இலைகளில்...
ஊதல் செய்யும் வித்தை....
நெருக்கமாக்கியது என்னை.....
மேலும் அவரோடு.....

சுதந்திர தினமும் குடியரசு தினமும்....
பண்டிகையாகும் இவருக்கு....
புதுத் துணியும் கொடியேற்றமும்....
பழக்கமானது எனக்கு......

நாளிதழ் வார இதழ் வாசிக்கும் பழக்கம்....
ஒட்டிக் கொண்டது எனக்கும் ....
அவர் தயவால்.....

காலத்தோடு ஓடும் ஓட்டத்தில்....
கால்களின் ஓட்டம் குறைத்து....
நாற்காலிக்குள் நமை ஒட்டவைத்து.....
காலம் நமை கடந்து சென்று....
கை கொட்டி சிரிக்கிறது.....

என் பாட்டனையும் நாற்காலிக்குள்
சிறை வைக்க முடியும் என...
காலம் கை கொட்டிய போது.....
நம்பவே முடியவில்லை என்னால்.....

கேட்டதெல்லாம் கொடுத்த பின்னும்
கழுத்தறுத்து போகும் கள்வன் போல....
ஓர் நாள் காலம் குடித்து கொண்டது
பாடநின் உயிரையும்...

நாளிதழ்கள் தவிக்கின்றன....
அவர் நடுங்கும் கரம் இன்றி....

அனைவரும் பழக்கப்பட்டு விட்டார்கள்...
அவர் இன்றி வாழ...
மூலையில் கிடக்கும் நாற்காலி மட்டும்.....
காத்திருக்கிறது காலத்தோடு.....
அடுத்த காவியத்திற்கு ......

எழுதியவர் : (31-May-12, 9:00 pm)
பார்வை : 185

மேலே