பணி நிறைவு நல் வாழ்த்துக்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
29 ஆண்டுகள்
போட்டி நிறைந்த அடுகளம்
இன்னல்கள், இடையூறுகள்
அரசியல்,பொது மக்கள்
நாள்தோறும் பயணம்
எண்ணி பார்க்கவே பிரமிப்பும் பயமும்
கைகோர்க்கும் தருணம்...
எங்களுக்காகவே வாழ்ந்து
இன்னல்கள் நீக்கி
இனியதொரு வாழ்வளித்தாய்...
நல்லதொரு தந்தையாய்
தோழனாய்,யாருக்கும் கிடைக்காத
வரத்தினை எமக்கு அளித்தாய்...
பணி நிறைவு நாளாக
உமக்கு இருந்தாலும்
பார் உலகம்
உம் பணி நினைக்கும்....
இனிய தந்தைக்கு (பொ.கந்தசாமி, V .A .O)
பணி நிறைவு நல் வாழ்த்துக்களுடன்
தந்தை அடித்திடாத ஒரே மகன்
பரமகுரு -வின் நல் வாழ்த்துக்கள்