ஏழை மனம்
பொன்னும் பொருளும்
எதற்கு?
நாடகம் போடவா?
வாழ்க்கை ஒரு
வேடம்தானே! ஆனால்..
பறவை மிருகங்களைப்
பார்! ஜாதிகள்
இல்லைதானே!
வான் நிலவில்
நிறங்களில் கூட
பேதமில்லைதானே!
மலர்களிலே கூட
பேதமில்லைதானே
மணம்வீசுவதிலே!
ஏழைச் செல்வர்க ளில்லைதானே
முகர்ந்து மகிழ....
ஆனால்..
பொன்னும் பொருளும்
இல்லை எங்களிடம்!
கபட நெஞ்சில்
கள்ளமுமில்லை !
இவைகளிடம்..
மனிதமனத்தில்
பேதமுள்ளது...
ஏழைச் செல்வனென்று.!