காதலெனும் மெல்லிய காமம் ...! (மனைவிக்கு சமர்ப்பணம் )

காமத்தில் தொடங்கி......
காதலில் கரைந்தே போனோம்மடி நாம் ...!?
கைப்பிடித்துக்கொடுத்த நாள் முதல் ...
நீ என்னையே
எந்நேரமும் நினைத்துக்கொண்டிருப்பாய்...
நானும் எப்போதாவது உன்னையும் நினைப்பேன் ...
காலக்கோழியாய் வேலையை கொறித்துக்கொண்டே ...!?
என்னக்கு தெரியும் அப்போதும் நீ ...
என்னைத்தான் சுவாசித்துக்கொண்டிருப்பாய் என்று ..!
தாய் அன்பே தலையானது இவ்வுலகில் என்பேன் ...
உன் அன்பினால் எனை நேசித்து நேசித்தே ....
நானும் உன் பிள்ளைகளுக்கு தாய்தானே என்பாய் ..!
எனது ஒவ்வொரு அசைவினிலும் நீயருப்பாய் ..
என் அத்துனைக்கனவுகளுக்கும் ....
நீ நிஜம் கொடுப்பாய் ...எனை
எந்நேரமும் எண்ணி எண்ணினியே... நீ
என் எண்ணங்கள் ஆகிப்போனாய் ...!
எனை காதலித்து காதலித்தே ...கடைசியில்
நீ என்னுள் கரைந்தே போனாய் ..!?
இனி நான் நிழலாய் ..நீ எந்தன் நிஜமாய் ..!
நான் நினைத்ததை நீ பேசி முடிப்பாய் ...
என் பார்வையிலே நீ ....
எனக்கு வேண்டியதை செய்து முடிப்பாய் ...!
இனி ..என்னுள்ளிருந்து உன்னை ...
பிரித்து பார்ப்பது சாத்தியமா ...?!
என்னுயிர் பிரிந்தாலும் அது நடவாது சத்தியமாய் !
நீ தூங்கி நான் பார்த்திருக்கிறேன் ...
தூங்கும்போதும் உன்னிதையம் எனை எதிபார்த்து
விழித்திருப்பதை கண்டு ....
தினமும் வியப்பினில் வேர்த்திருக்கின்றேன் ..!
மரணம்தான் நம் பிரிவுக்கு ..இடைவெளி என்றால்..
அந்த மரணத்தையும் நாம் ..பின்தொடர்வோம் ..
உன் அன்பிற்கு ஈடாய் ...என்னிடம் எதுவுமில்லை ..
உன் அன்பினை தவிர ...
அதை திருப்பிதரவும் எனக்கு மனமில்லை ...
ஆதலால் ..இறைவனிடம் வரம் கேட்டேன் ...
ஒருநொடிக்கு முன்பாவது ....
உனைமுந்தி நான் மரணிக்கவேண்டும் ..!!!?

எழுதியவர் : இரா.அருண்குமார் (1-Jun-12, 4:23 pm)
பார்வை : 400

மேலே