ஜோடனை திருமணங்கள் ...!

மேகங்கள் அழுகையில் .....
சோகமாய் மழை பொழிகிறது...!
தேகம் அழுகையில் .....
வேகமாய் மனம் கரைகிறது ...!
புன்னகை சிந்தும் மலர் கூட ...இன்று
பூமியில் மலர்வதற்கு அழுகிறது ...!
பொன்நகை போர்த்திய மலர்கள் வேண்டுமென்று ..
இந்த மனிதஇனம் அலைகிறது ...!
இங்கு திருமணத்தில் ...இரு மனங்களை ....
இணைத்து வைக்க யாருக்கும் மனம் இல்லை ..!
பணம் என்ற பசை கொண்டு ...
மனங்களை அழுத்தமாய் ஓட்டும்
அசிங்கம்தான் நடந்தேறுகிறது ...!?
ஆரம்பத்தில் ஆடம்பரமாய் ஆரம்பித்து ...
இறுதியில் இறந்துதான் போகிறது ...இந்த
மனம் ஒவ்வா மாந்தர்களின் வாழ்க்கை ..!
ஆர்பரிக்கும் கடலலையும் ....
அமைதியாகிப்போகும் ஆழ்கடலில் ...!
அழிந்துபோகும் உடல் மட்டும் ...
ஆடித்திரியும் உயிர் நிலைக்கும் வரையில் ..?!

எழுதியவர் : இரா.அருண்குமார் (1-Jun-12, 7:55 pm)
சேர்த்தது : R.Arun Kumar
பார்வை : 222

மேலே