[248 ] குழந்தாய்! குழந்தாய்!..
குழந்தாய்! குழந்தாய்!
கூறிடு குழந்தாய்!
சிரிக்கப் பயின்றதும் எப்படியோ?கை
சேர்த்துத் தட்டுவ தெப்படியோ?
பறிக்க முயல்வான் போல்போருளைப்
பற்றும் ஆற்றல் எப்படியோ?
அரசியல் கூட்டம் ஒன்றினிலே
அரக்கப் பறக்கப் பிறந்தாயோ?
தேர்தல் சாவடி ஒன்றினிலே
தெரிந்தே உன்தாய் பெற்றாளோ?
-௦-