பெண்ணாய் நான்

உன்போல் நானும்
உலகம் அறியா வயதில்
தாய்மடியின் இதம் உணர்ந்தேன்
தந்தை தோள் மீது அமர்ந்தேன்
தாய் மண்ணில் சுற்றி திரிந்தேன்
தயக்கம் இன்றி வாழ்ந்திருந்தேன்
நான் நானாய் இருந்த வரை...
பெண்ணாய் பார்த்த போது.....
தலைசாய்க்க மடி தரவில்லை
தந்தை என் கண் பார்த்ததில்லை
மனம் விட்டு பேச
மற்றவரை நாட, நான் நான் இல்லை...
காலடி வாசலை தாண்டினால்
கருவிழி மண்ணிற்குள்....
எனக்காய் ஒருவன்
தன்னை என் தந்தையிடம் விற்பான்
ஆனாலும்
அடிமையாய் நான் அவனுக்கு...
இறக்கும் நொடி
எதிர்பார்த்து
இறப்பதை விட,
இருக்கும் வரை
இன்பமாய் நடிக்க கற்றுக்கொண்டேன்
என் அன்னைக்காக....
பெண்ணாய் பிறப்பதை
வெறுக்கவில்லை...
வெறுக்கும் உரிமை கூட
பெண்ணிடம் இல்லை.......
இருந்தும்
பெண்ணாய் நான்......