தமிழன்

மலைக்கு மலை எதிரியாக
போட்டி போட முடியாது தோழா !
--------காற்று

உளிக்கு உளி எதிரியாக
போட்டி போட முடியாது தோழா!
------மலை

நெருப்புக்கு நெருப்பு எதிரியாக
போட்டி போட முடியாது தோழா!
-----பாறை

பாறைக்கு பாறை எதிரியாக
போட்டி போட முடியாது தோழா!
------நீர்

நீருக்கு நீர் எதிரியாக
போட்டி போட முடியாது தோழா!
---- -அணை

அணைக் கட்டியவனிடம்
அணை எதிரியாக
போட்டி போட முடியுமா?தோழா!

அணைக்கு எதிரி யார்
என்று நீயே கேட்டுக்
கொள் தமிழனே!

எழுதியவர் : செயா ரெத்தினம் (2-Jun-12, 4:55 am)
Tanglish : thamizhan
பார்வை : 296

மேலே