கோமாதாவே கோமாதாவே

கோமாதாவே!கோமாதாவே!
உனக்கு புல் வைக்கிறேன்
நீயாக சாப்பிட்டுக்கொள்...

உனக்கு வைக்கோல் வைக்கிறேன்
நீயே தின்று கொள் ...

உனக்கு புண்ணாக்கு வைக்கிறேன்
நீயே சாப்பிட்டுக் கொள்...

உனக்கு தண்ணீர் ஊற்றுகிறேன்
நீயே உறிஞ்சிகொள்...

ஆனால்..
உன்னுடைய சாணியை மட்டும்
எடுக்க எனக்கு வழிவிடு!

உன் கொம்புகளால் என்னை
அணைத்து விடாதே !

அந்த புண்ணியம் போதும்
எனக்கு! ஏன்?

நீ தினமும் எங்களுக்கு
உன் ரத்தத்தை பாலாகத் தருகிறாயே ..

அதற்கு கோமாதா ;

எங்கள் ரத்தம் ஆரோக்யமாக வாழ்வதற்குதனா ?
குழந்தைகளுக்கு பால் சுரக்க
மனமில்லாத தாய்மார்களே !

அழகு குறைந்து விடும் என்றா ..
எங்கள் கன்றுகளைப்
பட்டினி போடுகிறீர்!

இறைவனுக்குப் பாலபிஷேகம் செய்து
புண்ணியம் சேர்ப்பவர்களே!
எங்கள் பாவத்தை எங்கே சேர்ப்பீர்!

நான் முறையிடுவேன்! மனுநீதிச்
சோழனிடம்!
இன்று உயிருடனிருந்தால் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (2-Jun-12, 10:42 am)
பார்வை : 177

மேலே