சுமையில்லை என்றுமே
கழுதையாரே!கழுதையாரே!
நீ எங்கள் வீட்டு வழியாகத்தான்
தினமும் செல்கின்றாய்!
காலையில் உன் முகத்தில் விழித்தால்
அதிர்ஷ்டம் என்பார்கள்!
அதில் எனக்கு நம்பிக்கையில்லை!
காலையில் தினமும் நீ சுமையோடு முதுகில்
பழைய துணிகளை எடுத்துச் செல்கிறாய்
காவிரி கரைக்கு!
திரும்ப வரும்போதும்
மாலையில் சுத்தம் செய்த சுருங்காத மடித்த
துணிகளை முதுகில் சுமந்து
வருகின்றாய்!
உனக்கு முதுகுதான் வலிக்காதோ!
அதற்கு கழுதை..
சுமை எனக்கு மகிழ்ச்சியும்
தருவதில்லை!
வருத்தத்தையும் தருவதில்லை!
சுமையை சுமையாக
நினைத்ததால்தானே!
எனக்கு சுமையில்லை
என்றுமே !