ஆடு பேசுது
நான் எங்கிருந்து வந்தேன்?
யாருக்காக வாழ்கிறேன்?
என்று எனக்குப் புரியவில்லை?
ஆனால்..நான் தினமும்
வயலில் உள்ள புல்லைத் தின்றுவிட்டு
எஜமானனின் வீட்டில் தங்கி உறங்கிவிடுகிறேன் !
நன்கு கொழுத்து வளர்கிறேன்!
ஆடு ஆட்டுக்கிடாவாய்!
சிலர் என்னை கோவிலுக்கு வேண்டி
கோவிலில் விட்டு விடுகிறார்கள்
ஆட்டுக் கிடா,சாமிககிடா என்று
சிலர் என்னை சாமிக்கு வேண்டி
பலியிடுகிறார்கள் பலியாடு என்று!
சிலர் என்னை கசாப்புக்காரன்
கையில் விற்று விடுகிறார்கள்
ஆட்டுக்கறி என்று!
நான் என்ன பாவம் செய்தேன்?
ஒரு நாள் ஒரு ஜென்மத்தில்
ஒரு முறை நீங்கள்
அவதரித்துப் பாருங்கள்
எங்கள் வேதனை புரியும்?
நீங்களும் அப்பாவி தானென்று!