ரசிக்கலாம் வாங்க..!!
காலை கதிரவனின் செம்பவள கதிரும்
மாலை சூரியன் மஞ்சள் ஒளியும்
இனிய நிலவின் முழுமதி இரவும்
நெட்சத்திர கூட்டத்தின் மின்மினி ஒளியும்
சலசலத்து ஓடும் அருவியின் அழகும்
பச்சை பசேலென பறந்திருக்கும் காடும்
சிறகடித்து பறக்கும் பறவைகள் கூட்டமும்
அடடா அடடா... இயற்கையின் அற்புதமன்றோ..!
இயற்கை அழகுகள் கொள்ளை கொள்ளை..!
பார்ப்போம் ரசிப்போம் மகிழ்வோம்
வாழ்வை ருசிப்போம்...
இயற்கையோடு இணைந்தே இனிதே வாழ்வோம்..