மங்காத ஜோதியே

எத்தனையோ அரசர்களையும்
ஆட்சிகளையும் கண்டோம் நாங்கள்

நம் கரைகளிலே அக்பர் ஆண்டான்.
நம் இந்திய வரலாற்றில் அசோகனைக் கண்டோம்...

பாண்டவர்கள் போர்க்களத்திலே
நடுவிலே கீதாபதேசம்
செய்தான் கண்ணன்.
நாம் காணாத உத்தமர்கள் இல்லை.

ஆனால்...
இந்த அத்தனை உத்தமர்களையும்
உன் உருவத்தில்
கண்டோமே!

அர்ச்சுனனின் வீரமும்
அசோகனின் வைராக்கியமும்
கண்ணனின் ஞானமும்
காந்தியின் சாந்தமும்
புத்தரின் கருணையும்
உன்னிடம் பொருந்தியிருக்கக் கண்டோமே!

இந்தியாவின் குன்றாத
ஒளி விளக்கே!மங்காத ஒளி விளக்கே !

உன் மரணத்தால் நாங்கள் வாழ்விழந்தோம்!
இனி நாங்கள் இருந்தால் என்ன? உதிர்ந்தால் என்ன?

இனி யார் சட்டையை நாங்கள் அலங்கரிக்கப்
போகின்றோம் என்று ரோஜா மலர்கள்
கண்ணீர் விட்டன.

பால் வடியும் சிறுவர்களின்
முகங்களிலெல்லாம் கண்ணீர்
பெருகியதே உனைக் கண்டு
இந்த ரோஜாக்கள் கண்ணீர் விட்டதே !

பாரத மக்களின் 90 கோடி
கண்களும் துயரம் தாங்காமல்
கலந்கினார்களே !
மங்காத ஜோதியே ! ரோஜாவே !

எழுதியவர் : செயா ரெத்தினம் (4-Jun-12, 3:10 am)
பார்வை : 205

மேலே