என்ன செய்யலாம் தோழர்களே?

புத்தகம் வெளியிடும் நாடுகளில்
இந்திய முதலிடம் வகிக்கிறது.

போராட்டம்,
வீரம்,
துணிச்சல்,
எதிர் நீச்சல்,
வறுமை
தன்னம்பிக்கை,
தேச ஒருமைப்பாடு,
மார்க்சியம்,
எழுச்சி,
இது குறித்து எழுதபட்ட புத்தகங்கள்
ஆயிரமாயிரம்.

புத்தகம் எழுதியவர்களில்
பாதிபேர்
வீதி வந்து
போராடியிருந்தால்
போலிகளை ஒழித்திருக்கலாமோ?
சொற்பொழிவில் நாம் போராளிகளாகவும்
சோதனை தளங்களில் நான் சோம்பேறிகளாகவும்
இருந்துவிட்டோமோ ? என்பது
என் எண்ணம்.

இந்த தேசத்தின்
எதிர்காலம் நம் கையில் இருக்கிறதாம்
என்ன செய்யலாம் தோழர்களே ?

--- தமிழ்தாசன் ---

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (4-Jun-12, 5:06 pm)
பார்வை : 250

மேலே