இதயம் இறந்துவிடும்...!

எரிமலை வெப்பம்
எகிறி குதித்ததால்
பனி மழை தீவில்
படர்ந்த காட்டுத் தீ உருமாறி....

கடல் வழி உப்பில்
கரையும் உயிரினங்கள்
ஒளிவிடும் சுவாசத்தில்
ஒளி வேதி நிலங்களை யெல்லாம்
கொலை நிலமாய் மாற்றி

உணவிடும் தொழிற்ச்சாலையில்
ஊரை சுற்றும் நச்சு புகைகள்
மகரந்த துகள்கள் மூலம்
மரணக் காற்றில் ஊடுருவி

சாலை வட்டத்தில் வாய் விட்டு
சிரிக்கும் புகை தேவதை இன்றைய
விமான ராணியாய்
விண்ணையும் மண்ணையும்
விளையற்ற நிலமாய் வளர்த்து

ஐய்ம் பூதங்களையும்
சிறுக கொன்று பெருக தீர்க்கும்
சுவாசங்கள் நாசங்களாய்
மாறக்கண்டும் நாம்
திருந்தவில்லை எனில்
இதயம் இறந்துவிடும்...!

எழுதியவர் : ஹிஷாலீ (4-Jun-12, 2:30 pm)
சேர்த்தது : hishalee
பார்வை : 261

மேலே