காந்தி சிரிக்கிறார்!
விட்டுவிடுங்கள்
காந்தியை!!
எல்லா பாவத்திற்கும்
ஏன் அவரை சாட்சி ஆக்குகிறீர்கள்!
அவர்
ஏளனமாய் சிரிக்கிறார்
உழைக்காமல் உண்பவனை பார்த்து...
சாந்தமாய்
புன்முறுவல் செய்கிறார்
தர்மம் செய்பவனை பார்த்து...
பெருமித சிரிப்பு
உழைத்த கூலி பெற்றவனை பார்த்து...
வள்ளுவர் சிரிப்பு
சிரிக்கிறார்
சுவிஸ் வங்கியில்
பணம் பதுக்கும் முதலைகளை பார்த்து!
அது என்ன
விளங்காத வள்ளுவர் சிரிப்பு?
இடுக்கண் வரும்கால் நகுகிறார்!
சிலநேரம்
கண்ணாடிக்குப்பின்
மரச்சட்டங்களுக்கு நடுவில்!
சிலநேரம்
சிவப்பு வெள்ளை சுவர்களில்!
ஏசி அறைகளில்!
இருந்தும்,
பலநேரம்
காகிதத்தால்களில்
நாணயமற்ற
மனிதர்களிடையே
நாணயத்தின் மறுபக்கத்தில்!
ஊழல் வியாதிகளுக்கு
ஒரு வேண்டுகோள்
முதலில் காந்தி படத்தை
ரூபாய் நோட்டுகளில் நீக்குங்கள்...
.