!!! எழுத்து. காம் தோழமைகளே...! வாருங்கள் கவிதை திருவிழாவிற்கு !!! (நிலா சூரியன் )

எழுத்து. காம் தோழமை உள்ளங்களே... உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்,

உலகிற்கெல்லாம் சோறுபோடும் உன்னத தெய்வங்களான ஆடிப்பட்டம் தேடிப்பார்த்து விதைக்கும் உழவர்களின் நல்லேறு பொன்விழாவிற்கும்,
உலகமே போற்றும் சோஷலிச புரட்சியாளன் சே குவேரா அவர்களின் பிறந்த நாளிர்காகவும் இந்த மாதம் இங்கே கவிதை திருவிழா நடக்கிறது,
இந்த கவிதை திருவிழாவில் நீங்கள் அனைவரும் கலந்துகொண்டு உங்கள் கவிதைகளால் உழவனையும், உழவுத்தொழிளையும், புரட்சியாளர் சே குவேராவையும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

தோழமை உள்ளங்களே...
நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் விவசாயியின் வியர்வையும் உழைப்பும் இருக்கிறது, அவன் பட்டினிகிடந்து உழைக்கிறான் நாம் உண்கிறோம், தானத்திலே சிறந்தது அன்னதானம் என்கிறோம் அந்த அன்னத்தை அளித்தவனின் புகழை உங்கள் கவிதைகளால் கூறிடுங்கள், இந்த உலகம் ஏர் பிடிக்கும் உழவனின் பின்புதான் சுழன்றுகொண்டு இருக்கிறது என்பதை உங்கள் கவிதைகளால் சொல்லுங்கள்... ஆடி பட்டம் பார்த்து தற்பொழுது விவசாயி நிலத்தில் இறங்கிவிட்டான் நல்லேறு கட்டிவிட்டான், அவன் விளைச்சலில் வெற்றிபெற உங்கள் கவிதை கொண்டு வாழ்த்துங்கள்.. எழுத்து தோழமைகள் அனைவரும் ஒன்றுகூடி உழவன்புகழ் பாடுவோம் வாருங்கள்...
நமது பசியை போக்கும் அந்த தெய்வத்தை நாம் ஒன்றுகூடி பாராட்டுவோம் நண்பர்களே...

மேலும் இந்த மாதாம் உலகமே வியந்து பாராட்டும் சோஷலிச புரட்சியாளன் சே குவேராவின் பிறந்த தினம் வருகிறது, அந்த மாபெரும் மக்கள் புரட்சியாளனையும் உங்கள் கவிதை மாலைசூடி கவிதைகளால் வாழ்த்துங்கள் தோழர்களே... உலக சர்வதிகாரமே எதிர்த்து நின்றபோதும் அஞ்சா நெஞ்சனாய் ஒடுக்கப்பட்ட மக்களுக்காய் புரட்சிகள் பல செய்த அந்த புனித புத்தனை உங்கள் கவிதை கொண்டு வாழ்த்துங்கள் தோழமைகளே...

இந்த கவிதை திருவிழா எழுத்து குழுமத்தின் முழு அங்கீகாரத்தோடு நடக்கிறது தோழமைகளே... நாங்கள் தரும் ஐந்து தலைப்புகளில் உங்கள் கவிதைகளை இந்த எழுத்து தளத்தில் எழுதுங்கள் தோழமைகளே... பல செயல்பாடுகளுக்கு எழுதப்படும் உங்கள் கவிதைகளில் இருந்து இந்த உழவனையும், புரட்சியாளனையும் கொஞ்சம் எழுதுங்கள் நட்பு உள்ளங்ககளே...
அறிவிலும், அனுபவத்திலும், வயதிலும் முதிந்த நமது எழுத்துத்தள அனுபவசாளிகளிடமிருந்து பெறப்பட்ட ஐந்து தலைப்புக்கள் இங்கே இடம் பெற்று இருக்கிறது , அந்த ஐந்து தலைப்புகளில் உங்கள் கவிதைகளை பதிவு செய்யுங்கள் நட்பு உள்ளங்களே...
தலைப்புக்கள்:.
1 . தேவை ஒரு விவசாய புரட்சி...
2 . இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்...
3 . சே குவேர - ஒரு மாமனிதன்
4 . சமூக அவலங்கள்
5 . ஒப்பில்லா உழவு...
இந்த ஐந்து தலைப்புகளில் உங்கள் கவிதைகளை பதிவு செய்து இந்த கவிதை திருவிழாவை சிறப்பிக்கும்படி உங்ககளை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் தோழமைகளே.. ஒருவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்,
வயதில் முதிந்த அனுபவசாலிகளின் ஆலோசனையோடு நீங்கள் எழுதிய கவிதைகளில் சிறந்த ஒரு கவிதையை தேர்வு செய்து அந்த கவிதைக்கு அன்பு காணிக்கையாக ''மூவாயிரம் ரூபாய்'' அளிக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துகொள்கிறேன்.
இந்த மாதம் ஐந்தாம் தேதி தொடங்கி முப்பதாம் தேதிவரை நீங்கள் எழுதலாம், அடுத்தமாதம் நான்காம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஐந்தாம் தேதி உங்கள் கைகளில் அன்பளிப்புதொகை கிட்டும் என்பதை தெளிவாகவும் திட்டவட்டமாகவும் அறிவிக்கிறேன்.
தயவு செய்து உங்கள் சிந்தனைக்கு நான் விலைபேசுவதாக என்னிவிடாதீர்கள், உங்களின் திறமையான எழுத்திற்கு வழங்கும் ஒரு அன்புகாணிக்கைதான் இந்த சிறு தொகை.

இதை பற்றிய முரன்பான சிந்தனைக்கோ... அல்லது சலிப்பான சிந்தனைக்கோ போகாமல் இதை ஒரு ஆரோக்கியமான சிந்தனையாக எடுத்துகொண்டு உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன், மேலும் இது தற்பெருமைகாகவோ தற்புகழிச்சிகாகவோ அல்ல ... எழுத்து தோழமை உள்ளங்களை ஊக்குவிப்பதற்காகவும் ஆரோக்கியப்படுத்துவதர்காகவும் மேற்கொள்ளும் ஒரு சிறு முயற்ச்சிதான் இது என்பதை அணைத்து கவி நெஞ்சங்களும் கருத்தில்கொள்ள வேண்டுகிறேன்.
இதில் எந்த ஈகோவும் பார்க்காமல் எதார்த்தமான சிந்தனைக்கு வந்து இந்த கவிதை திருவிழாவில் கலந்துகொண்டு மேலே சொன்ன தலைப்புகளில் உங்கள் கவிதைகளை பதிவு செய்து பரிசுத்தொகையை பெற்றுகொள்ளும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எழுத்து தோழமை உள்ளங்களே...

எனது இந்த முடிவிற்கு எழுத்து குழுமம் முழு ஆதரவை அளித்ததைபோல் உங்களோடு முழு ஆதரவையும் அன்புடன் கேட்டுகொண்டு, இதை நீங்கள் ஏற்றுகொண்டு சிறப்பித்தால் இதோ போல் பல வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள வசதியாக எழுத்தில் ஒரு தனி பக்கத்தையே ஏற்படுத்தி தருகிறோம் என்று எழுத்துதளம் கூறி இருக்கிறது, கவிதை எழுதி உங்கள் அன்பை தாருங்கள் எங்களது அன்பு பரிசான காணிக்கையை அன்புள்ளத்தோடு ஏற்றுகொள்ளுங்கள்.
உங்களின் அன்பை நம்பிமட்டுமே இந்த செயலில் இரங்கி இருக்கிறேன், உங்கள் ஆதரவை தந்து எழுத்து தோழமைகளுக்கு பரவசம் தாருங்கள்.
தலைப்புகளில் கவிதை எழுதுங்கள் அன்புபரிசை அன்போடு ஏற்றுகொள்ளுங்கள்.....

நடுவர்களின் இறுதி தீர்ப்பையொட்டி உங்கள் கவிதைக்கு மகுடம் சூட்டப்படும்.
''உழவனையும்'' ''புரட்சியாளனையும்'' உங்கள் கவிதைகொண்டு அழுகுபடுத்துங்கள்.

நீங்கள் எழுதும் கவிதைகளின் தலைப்பை எனக்கு விடுகையின்மூலம் தெரிவித்தால் மேலும் சந்தோசப்படுவேன்.

தனிப்பட்ட தொடர்புக்கு:
jnsamythamil@gmail.com
00971557343978

என்றும் உங்கள் ஆதரவுக்காய் காத்திருக்கும்...
நிலாசூரியன்.

எழுதியவர் : நிலா சூரியன் ....... (5-Jun-12, 5:29 pm)
பார்வை : 260

மேலே