பிள்ளையாருக்கு வெயில் தெரியக்கூடாதுன்னு குளிரூட்டப்பட்ட பீடம்.

அட பாவிகளா..... அப்பா பிள்ளையாரப்பா அடிக்கிற வெயில் தாங்கல கொஞ்சம் வெப்பத்த தணிக்க கூடாதா? என்று பாமர மக்கள் கும்பிட..... சகலமும் படைத்த உங்க சாமிக்கே வேர்க்குதா? சூரியனை, சந்திரனை, எரிமலைகளை இப்படி சுட சுட சகலமும் படைத்த உங்க சாமிக்கு வேர்க்குமா? என்ன கொடுமைடா இது. அப்பறம் என்னடா சாமி. தன் வேர்வையை துடைத்துவிடுவதர்க்கு கூட சாதாரன மனுஷன் கைய நம்பி இருக்காரே சகலமும் படைத்த உங்க சாமி. அப்ப எங்க தெருவுல இருக்குற உச்சி மரத்தடி பிள்ளையாரெல்லாம் பாவம் ஏழையா?.... இத்தனை நூற்றாண்டுல இப்பத்தான் சாமிக்கு வேர்க்குதா? பாவமட சாமி. இப்படி வலிமையே இல்லாத சாமிய நம்பித்தான் என் பாமர மக்கள் இருக்காங்களா? வியர்க்கும் உங்க சாமிய கண்ணாடி பெட்டிக்குள்ள அடச்சுடீங்கலே அப்ப உங்க சாமிக்கு மூச்சு திணறல் ஏற்படும் ன்னு தோணலையா அறிவு ஜீவிகளே ? அதுக்கு என்ன பண்ணுவீங்கா? என் பாமர மக்கள் உழைத்து உழைத்து உண்டியல்ல போடும் காசுதான் இந்த குளிரூட்ட பட்ட வசதிக்கேல்லாம் காரணம். பாவம் என் விவசாயிகள், உழைப்பாளிகள் எல்லாம் வெயில்ல கஷ்டபடுறாங்க உங்க சாமிகிட்ட சொல்லி ஒரு ஏசி வானத்துல மாட்டிவிட சொல்ல கூடாதா ? எல்லாத்தியும் செய்யும் கடவுள் இத செய்யமாட்டார ? இனி எங்களுக்கு பகுத்தறிவ புகுத்த தந்தை பெரியார் தேவையில்ல. நீங்களே போதும். உங்க மூட்டாள்தனமே எங்களை சிந்திக்க வைத்துவிடும்.
திருடுவது தவறு என்று சொல்லிவிட்டு திருட்டு பிள்ளையார்க்குதான் சக்தி அதிகம் என்று சொன்னீர்கள் சகித்து கொண்டோம். பட்டினியில் மக்கள் செத்து மடிந்த போது பிள்ளையார் பால் குடித்தார் என்று சொன்னீர்கள் பரவாயில்லை என்றோம்... சுற்றுசூழல் மாசடைந்து எரிக்கும் வெயில் தோல் உரிக்கும் அளவுக்கு வெப்பம் அதிகரித்துவிட்டது. கடலில் போட்டால் கரைந்துவிடும் கற்சிலைக்கு ஏசி பொருத்திவிட்டீர்கள் இதை எப்படி பொறுத்து கொள்வது... இயந்திர கோளாறு ஏற்பட்டு ஏசி நின்றுவிட்டால் அதைகூட சரி செய்ய தெரியாத சாமிக்கு எதுக்குப்பா இவ்வளவு ஆடம்பரம்.. வளிமண்டலத்தை உருவாக்கிய, புயல் சூறாவளிக்கு காரணகர்த்தவான சாமிக்கே காற்று தட்டுப்பாடா? அவருக்கும் வேர்வை சுரக்குமா? அப்படிஎன்றால் மனிதனுக்கும் சாமிக்கும் என்னென்ன வித்தியாசங்கள் உள்ளது ?
பிள்ளையாரின் உருவகம் பற்றி வேதங்கள் சொல்லவது இதைதான். பார்வதியின் அழுக்கை உருட்டி வைத்து அதை ஒரு உருவம் செய்து உயிர் கொடுத்து உயிர் பெற்றவர்தான் பிள்ளையார். இதை நான் சொல்லவில்லை வேதங்கள் சொல்கிறது. ஒரு உருவம் செய்யும் அளவிற்கு உடலில் அத்தனை அழுக்கு உள்ள ஒரு தெய்வமா?
குறிப்பிட்ட இனத்தை தவிர மற்றவர்கள் கர்ப்பகிரகத்திற்குள் நுழைந்ததால் தீட்டு என்கிறீர்கள். அப்படியென்றால் அழுக்கே உருவான விநாயகர் உள்ளிருப்பது தீட்டு இல்லையா? அதென்ன சாமிக்கு ஒரு நியாம் எங்களுக்கு ஒரு நியாம். கடவுளுக்கு கதை எழுதனும்னு நினைச்ச நீங்க கொஞ்சம் என்பர் இருக்கிறார் என்றே வைத்து கொள்வோம். அவரே உன்னை கண்காணிக்கிறார். அப்படி இருக்க அவரிடம் நீ போய் பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் என்ன ? உனக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று எல்லாம் அறிந்த உன் சாமிக்கு தெரியாதா? இதை சொன்னால் அழும் பிள்ளைதான் பால் குடிக்கும் என்று தத்துவம் சொல்வீர்கள். நீ அழுத பிறகுதான் உன் தாய் பால் தருவாள். ஆனால் எல்லாம் தெரிந்த உன் சாமிக்கு நீ அழபோகிறாய் அதனால் உனக்கு பால் கொடுக்க வேண்டும் என்று தெரியாதா? இதெல்லாம் நீ யோசிக்க கூடாது சிந்திக்க கூடாது.. இதை அப்படியே நம்பு என்று சொல்கிறது வேதம். சிந்தித்தால் நீ நரகத்திற்கு போய்விடுவாய் என்ற தத்துவம் வேறு... நரகம் வைத்து நடுத்துகிற உங்கள் சாமியை விட கசாப்புக்கடை நடுத்துகிற மனிதர்கள் எவ்வளவோ பரவாயில்லை.
---தமிழ்தாசன்----