!!!தேவை ஒரு விவசாய புரட்சி(பிரியாராம்) !!!

அதிகாரம் செய்பவனுக்கும் ,
அடிமையாய் கிடப்பவனுக்கும்
கணிபொறியாளனுக்கும் ,
கழுதை மேய்ப்பவனுக்கும்
கட்டுகாட்டாய் பணம் வைத்திருப்பவனுக்கும்-அதை கொள்ளையடிப்பவனுக்கும்,
உனக்கும் எனக்கும்
புத்துணர்ச்சி தந்து உயிர் வாழ
உணவு தரும் விவசாயம் இன்றைய
சூழலில் உருக்குலையாமலிருக்க
தேவை ஒரு விவசாய புரட்சி ....
மக்களே நம் சோம்பலை முறிப்போம்
அலுவலக வேலையோடு
விவசாயத்தையும் இணைப்போம்
இந்திய அரசே !
விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக
மாறி வருவதை தடுத்து நிறுத்து.
அரசு ஊழியர்களுக்கு தரும் முன்னுரிமையை
அவர்கள் உண்ணும் உணவை
அறுவடை செய்யும் வரை அயராது
அன்றாடம் வியர்வை சிந்தும்
விவசாயிக்கு செய்து கொடு...
நம் தாய்திரு நாட்டின் முதுகெலும்பு
விவசாயம் என்பதை மனதிற் கொண்டு
எதிர்கட்சியாளன் என்ன செய்தான்
என்று சிந்திப்பதை விட்டுவிட்டு
ஏழை விவசாயி என்ன செய்கிறான்
என்று யோசி............
வியர்வை சிந்தாமல் வெயில் படாமல்
நான்கு அறைக்குள் கிடப்பவனுக்கு
கை நிறைய ஊதியம் கடைசியில் ஓய்வூதியம்
நித்தம் உழைத்து நாலு பேர் வாழ
வழி செய்பவனின் நிலை ?
ஒரு ஏழை விவசாயி ஏதேனும் சான்று
பெற அரசு அலுவலகம் சென்றால்
நேரமில்லை என்பார்கள் இதற்கு
சட்டத்தில் இடமில்லை என்பார்கள்
இன்று போய் நாளை வா என்பார்கள்
இதை எல்லாம் அந்த விவசாயி அவர்களிடம்
சொன்னால் நித்தம் சோறு உண்ண
முடியுமா என்பதை மறந்துவிடுகிறார்கள்
இந்த நிலை மாற நிச்சயம் ஒரு புரட்சி தேவை
மரமில்லையேல் மழையில்லை
மழையில்லையேல் விவசாயின் நிலை ?
அத்துமீறும் அநியாயக்காரர்களின்
ஆணவத்தை அடக்குவோம்
இயற்கை வளங்களை காப்போம்
குறுநில விவசாயிகளும் -தினம்
கூலி செய்பவர்களும் குடுமபத்தை
விட்டு செய்யும் தொழிலை விட்டு
குடிபெயர்ந்து சென்று கொத்தடிமையாய்
வாழ்ந்து கொண்டிருக்கும் நம்குல விவசாயிகளை
கொண்டு வருவோமிங்கு வாருங்கள்
எழுத்தாளர்களே நம் எழுத்தால்
புரட்சி செய்து இந்திய விவசாயத்தை காப்போம் ....
படித்த நாமும் சோம்பலை முறிப்போம்
நித்தம் நிலத்தில் முடிந்தவரை பாடுபடுவோம்