சே குவேர - ஒரு மாமனிதன் (கவிதை திருவிழா பங்களிப்பு)

சே என்ற மக்கள் செல்லமாக அழைத்த
பன்முக பண்பாள நிகரில்லா தலைவனே
அர்ஜென்டினாவின் மார்க்சிச புரட்சியாளனே
கியூபா புரட்சியின் சரித்திர கதாநாயகனே
முதலாளித்துவத்தின் ஏகவலை பகைவனே
ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புலியாய் சீறியவனே
பாடிஸ்டா அரசை தூக்கியெறிய முனைந்தவனே
ஃபிடல் காஸ்ட்ரோவின் தளபதியானவனே
படைப்பாற்றல் மிக்க புரட்சிக்கர எழுத்தாளனே
கெரில்லா போர்முறையில் புதுஏடு இயற்றியவனே.
எதிர்கலாச்சாரதின் சின்னமாக விளங்கியவனே
பொலிவியாவின் கிளர்ச்சிக்கு வித்திட்டவனே
பொலிவிராணுவத்தால் கொல்லபட்டாலும்
கிளர்ச்சி, புரட்சி, சோசலியத்தின் மருப்பொருளாய்
மக்களின் மனதில் என்றும் வாழ்பவனே
சே குவேர! காலத்தால் அழியாத் தலைவனே

"Better to die standing, than to live on your knees."
– Che Guevara

எழுதியவர் : ஆயிஷா பாரூக் (7-Jun-12, 2:32 pm)
பார்வை : 787

மேலே